முன்மாதிரி மாணவி.
முன்மாதிரி மாணவி கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி பயிலும், 3E தரத்தினைச் சேர்ந்த D.N.A. பாத்திமா மெரிஸா எனும் மாணவி தனது பிறந்ததினத்தை முன்னிட்டு ஒரு தொகுதி நூற்களை பாடசாலை நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார். இதனை பாடசாலையின் அதிபர், ஜனாப். U.L. Nazar சேர், மற்றும் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், வகுப்பாசிரியர், நூலகப் பொறுப்பாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் வாழ்த்தினர். "கற்பவனாக இரு, கற்றுக் கொடுப்பவனாக இரு, கற்பபவனுக்கு உதவுபவனாக இரு . . . " எனும் பெருமானார்(ஸல்) அவர்களின் ஹதீஸை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் பாடசாலை சமூகத்தை அல்-ஹிலால் வித்தியாலயம் உருவாக்கி வருகின்றமை பெருமைக்குரிய விடயமாகும். D.N.A. பாத்திமா மெரிஸாவின் தந்தையான, M.A. Dilip Naushad Aboobucker அவர்கள் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றுவதுடன், தாயாரான M.H. Ismath Begum அவர்கள் KM/KM/Al- Misbah Maha Vidyalaya த்தில் ஆசிரியையாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.