இன்றைய இப்படியும் ஒரு மாணவன் பகுதியில் மாணவர் குழுவொன்று இடம்பெறுகின்றது. [மாணவர்களின் பெயர் விபரங்கள், புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.] 16.06.2023 - வெள்ளிக்கிழமை. ஆரம்பப் பிரிவு மாணவர்களின் இடைவேளை நேரம்.. ஆரம்பப் பிரிவு மாணவர்கள் சுறுசுறுப்பாக இடைவேளை நேரத்தை கழித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களது சுறுசுறுப்பில், எறும்புகளுக்கு வேர்த்துவிடும் . . . பட்சிகள் தோற்றுவிடும் . . . அம் மாணவர்கள் உணவைப் பகிர்ந்து உண்ணும் விதமோ . . . தனியழகு . . . சிந்தாமல் சிதறாமல் உணவை உண்ணும் சிறுவர்கள் . . . பாடசாலை இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது... இப்படி இருக்கையில்... "வேர்த்து விறுவிறுத்து.." சுமார் 5 மாணவர்கள் ...அரக்கப் பறக்க Sir... Sir என்று கத்தியவாறு ஓடி வந்தார்கள்... ஏதோ . . . பாரிய அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும் என்று . . . உள்ளுணர்வு உணர்த்தியது . . . " Sir . . . Sir . . . அங்கே இருக்கின்ற பூ மரத்தை யாரோ பிடுங்கிப் போட்டிருக்கிறார்கள். அத . . . அதை . . . நாட்டாவிட்டால் செத்துவிடும் . . . " என்று 5 மாணவர்களும் ஆளுக்கொரு செய்தியாக குறிப்பிட்டார்கள். ...
Comments
Post a Comment