இப்படியும் ஒரு மாணவன் ...

பாடசாலை இரண்டாம் தவணைப் பரீட்சையில் மூழ்கிக்கொண்டிருந்தது. மாணவர்கள் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தனர்.

மாணவனொருவன்..

நேரான பார்வையுடன் . .

திடமான நடையுடன் . .

பாடசாலை முற்றத்திலுள்ள கொடிக்கம்பம் உள்ள பகுதியை கடந்து சென்றுகொண்டிருந்தான் . .

விரைவாகச் செல்லும் கடுகதி பஸ்ஸொன்று சடுதியாக brake அடிப்பதைப்போன்று...

வெறுமையாகக் கிடந்த bench ஐக் கடக்காமல் அப்படியே திடீரென நின்றான் . . .

நின்ற கணத்திலே . . .

அம் மாணவனின் கைகள்

ஓரிரு பிடிகளாக மண்ணை அள்ளின . . .

வெறுமையாகக் கிடந்த bench இல் ஏதோ கிறுக்கிச் சென்றான் . . .

அவ் விடத்துக்குச் சென்று பார்த்தேன் . . .

ஒரு முகத்தை 

புன்முறுவலாக . . .

நொடிப்பொழுதில் . . .

ஆக்கமாக . . .

மண்ணினால் . .

அம் மாணவன் . . . வரைந்திருந்தான் . . .


 

அம் மாணவனை தொடர்ந்து சென்று . . .

அம் மாணவனின் வகுப்புக்குச் சென்று . . .

மாணவனைப் பாராட்டினேன் . . .

அம் மாணவனின் பின்னணி . . .

பற்றி வகுப்பாசிரியர் இவ்வாறு குறிப்பிட்டார் :

"வகுப்பில் இயங்குநிலையிலுள்ள மாணவன்,

கற்றலிலும் சிறந்து விளங்கும் மாணவன்...

இம் மாணவனின் பெற்றோரும் . . . பாடசாலைக்காக அர்ப்பணிப்புடன் உதவுபவர்கள்"

என்று

ஹாலித் அப்துல்லாஹ் என்ற அம் மாணவனின் விவரத்தை தரம் 2D வகுப்பாசிரியை 

Mrs. M.S. Rinula ஆசிரியை குறிப்பிட்டார்.

மொத்தத்தில் அம் மாணவன்

"விளையும் பயிர் . . ."

பாராட்ட நினைத்தால் நீங்களும் பாராட்டலாம் ...  


Comments

Post a Comment

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்..