இப்படியும் ஒரு மாணவன்..
24/02/2023 - வெள்ளிக்கிழமை.
காலைப்பொழுது ...
இறைவனின் அத்தாட்சிகளை சுவைக்கும் நேரமது ...
இருள்படிந்த உலகம்..
வெளிச்சத்தால் தீந்தையடிக்கப்பட்டுக்கொண்டிருந்தது . . .
கூடுகளுக்குள் உறைந்திருந்த பறவைகள் தேடலுக்காக சுறுசுறுப்பாகப் பயணமாகிக்கொண்டிருந்தன . . .
அவ்வாறுதான் அல்ஹிலால் வித்தியாலயமும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தது...
நேரம் காலை 07.30 ....
பாடசாலை ஒலிபெருக்கியில் கிறாஅத் ஆரம்பமாகியது ...
இன்று வெள்ளிக்கிழமை என்பதால், சூரதுல் ஜும்ஆ வசனங்கள் ஓதப்பட்டன...
கிறாஅத் ஓதல் ஆரம்பித்தவுடன் அனைவரும் அசையாமல் நின்றுகொண்டிருந்தனர்..
பாடசாலை வளாகம் கிறாஅத் ஓதலுக்காக பக்தி நிறைந்த பிரதிபலிப்பை வெளிக்காட்டிக்கொண்டிருந்தது.
பாடசாலை வளாகத்தில் அசையாமல் நின்ற மாணவர்களிடையே...
தரம் 5 அல்லது தரம் 4 ஐச் சேர்த்த ஒரு மாணவனின் உதடுகள் மட்டும் இலேசாக அசைந்துகொண்டிருந்தது . .
உற்றுப் பார்த்தபோது ஆச்சரியம் ஆட்கொண்டது...
ஒலிபெருக்கியினால் ஓதப்படும் கிறாஅத்தை அம்மாணவனின் உதடுகளும் மெதுவாக அசைபோட்டுக்கொண்டிருந்தது...
உரத்துப் பெய்யும் கன மழை . . . தடாரென தூவானம் தூவி மெதுவாக நிற்பதைப்போல . . .
தன்னை அவதானிப்பதை அறிந்த அவனது உதடுகள் மெதுவாக கிறாஅத்தை பின்தொடர்வதை நிறுத்தியது ...
கிறாஅத் முடியும் வரை காத்திருந்து . . .
அம் மாணவனை அருகில் அழைத்தேன் . . .
குறிப்பிட்ட அந்த சூராவை ஓதும்படி வேண்டினேன் . . .
தாமதமின்றி அம்மாணவன் சூரதுல் ஜும்ஆவை ஓதினான் . . .
3 ஆம் ஜுஸ்வில் உள்ள சூராவை ஆரம்பப் பிரிவு மாணவனொருவன் மனனமிட்டிருப்பது . . .
ஆச்சரியத்தை வரவழைத்தது . . .
சரி . . . எந்த மத்ரஸாவில் ஹிப்லு செய்கிறீர்கள் என்று கேட்டவுடன்.. கூறிய பதில் . . . மேலும் ஆச்சரியத்தை அளித்தது . . .
"நாங்கள் .. வீட்டில் இருந்துதான் மனனமிடுவோம்... " என்று பன்மையில் பதிலளித்தான் அம் மாணவன்...
அம் மாணவனின் வீடு . . .
ஆன்மீகச் செல்வத்தினால் நிரப்பமான வீடு - குடும்பம் என்பதை ஊகித்துக்கொள்ள முடிந்தது . . .
அம் மாணவனைப் பற்றி வகுப்பாசிரியர் கூறியதென்ன ?
அம் மாணவனின் வகுப்பினை கேட்டறிந்து, சற்று நேரத்தின் பின் . . .
5C - Mrs. M.I. ஹாரிதா ஆசிரியையின் வகுப்புக்குச் சென்றேன்...
S.M. சாத் அபீப் என்ற அம் மாணவனைப் பற்றிய வகுப்பாசிரியையின் பதிவுகள் இவ்வாறு இருந்தது :
"அனைவருடனும் அன்பாகப் பழகக்கூடிய மாணவன் - S.M. சாத் அபீப் . . .
நேரத்தைப் பிரயோசனமாகப் பயன்படுத்தக்கூடிய மாணவன் . . .
இம் மாணவனின் பெற்றோரும் பண்பாகப் பேசக்கூடியவர்கள்... " என்று அம் மாணவனைப் பற்றி வகுப்பாசிரியை குறிப்பிட்டார்...
மாணவன் S.M. சாத் அபீப் யின் எதிர்காலம் சிறக்க பிராத்தனைகளும்... வாழ்த்துக்களும் ...
Comments
Post a Comment