இப்படியும் ஒரு மாணவன்.
இன்றைய இப்படியும் ஒரு மாணவன் பகுதியில் மாணவர் குழுவொன்று இடம்பெறுகின்றது.
[மாணவர்களின் பெயர் விபரங்கள், புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.]
16.06.2023 - வெள்ளிக்கிழமை.
ஆரம்பப் பிரிவு மாணவர்களின் இடைவேளை நேரம்..
ஆரம்பப் பிரிவு மாணவர்கள் சுறுசுறுப்பாக இடைவேளை நேரத்தை கழித்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்களது சுறுசுறுப்பில், எறும்புகளுக்கு வேர்த்துவிடும் . . . பட்சிகள் தோற்றுவிடும் . . .
அம் மாணவர்கள் உணவைப் பகிர்ந்து உண்ணும் விதமோ . . . தனியழகு . . .
சிந்தாமல் சிதறாமல் உணவை உண்ணும் சிறுவர்கள் . . .
பாடசாலை இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது...
இப்படி இருக்கையில்...
"வேர்த்து விறுவிறுத்து.." சுமார் 5 மாணவர்கள்
...அரக்கப் பறக்க Sir... Sir என்று கத்தியவாறு ஓடி வந்தார்கள்...
ஏதோ . . . பாரிய அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும் என்று . . . உள்ளுணர்வு உணர்த்தியது . . .
" Sir . . .
Sir . . .
அங்கே இருக்கின்ற பூ மரத்தை யாரோ பிடுங்கிப் போட்டிருக்கிறார்கள்.
அத . . . அதை . . . நாட்டாவிட்டால் செத்துவிடும் . . . " என்று 5 மாணவர்களும் ஆளுக்கொரு செய்தியாக குறிப்பிட்டார்கள்.
எப்படியாவது அந்த மரத்தை உயிர்ப்பித்துவிடுவோம் . . . என்ற ஆதங்கத்தில் வந்த அந்த மாணவர்களுக்கு நிச்சயம் செவிசாய்த்தே ஆகவேண்டும்.
சரி . . .
இடத்தைக் காட்டுங்கள் . . . வாருங்கள் போய்ப் பார்ப்போம் . . . என்று மாணவர்களுடன் சென்று இடத்தை நோட்டமிட்டேன்...
டெங்கு நுளம்பு ஒழிப்புக்காக அண்மிய நாட்களில் . . . சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது . . . அதில் புல் பூண்டுகள் பிடுங்கப்பட்டபோது... அதில் இந்த பூஞ்செடியும் பிடுங்கப்பட்டிருக்க வேண்டும்...
"சரி . . .
என்ன செய்வோம் . . .
அப்படியே விட்டுவிடுவோமா . . . ?
அல்லது முற்றுமுழுதாக பிடிங்கிவிடுவோமா . . . ?"
என்ற கேள்வியை மாணவர்களிடத்திலே தொடுத்தேன்...
" ... இல்ல .. Sir..
... இல்ல .. Sir..
அத நாட்டுவோம் Sir...
நாட்டிவிட்டு தண்ணி ஊற்றுவோம் - அது முளைத்துவிடும். . ." என்று எல்லோரும் ஏகோபித்த குரலில் குறிப்பிட்டனர்.
"பூஞ்செடியை நாட்டுவோம்" என்று மாணவர்கள் விடைபகர்வார்கள் என்பதை . . . நான் எதிர்பார்த்த ஒன்றுதான் . . .
ஆனால் . . .
நாட்டிவிட்டு தண்ணீர் ஊற்றுவோம் ... அது முளைத்துவிடும் . . . என்று இம் மாணவர்கள் கூறியது என்னைச் சிந்திக்கச் செய்தது . . .
பெரியவர்களான எம்மைப் பொறுத்வரைக்கும் இது சாதாரண விடயமாகத் தோன்றலாம்...
ஆனால் தரம் 2 மாணவர்களைப் பொறுத்தவரைக்கும் . . .
தரம் 2 ஐயையும் தாண்டிய பக்குவம் அது . . .
செடியை நடவும் வேண்டும் . . .
தண்ணீர் ஊற்றி உயிர்ப்பிக்கவும் வேண்டும் என்பது . . .
தமது இலக்கினை, இலச்சியத்தினை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற வேட்கையை வெளிப்படுத்தியது . . .
அவர்கள் விருப்பப்படியே . . அவர்களாலேயே மீண்டும் அந்த பூஞ்செடி நடப்பட்டு தண்ணீரும் ஊற்றப்பட்டது.
நடப்பட்டது பூஞ்செடி மாத்திரமல்ல . . . என்ற விடயம் உள்ளத்தில் திருப்தியோடு ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்தது.
ME பாஹிர் ஹம்தான்
SSM ஹன்பி அதா
MM நப்லி ஜெஸீத்
AA முஹம்மத் இன்ஹாம்
MI மஷாரிப்
ஆகிய இவ் 5 மாணவர்களும்தான்... அந்தப் பூஞ்செடியை மீண்டும் நடுவதற்கு காரணமானவர்களாவர்..
இம் மாணவர்களைப் பற்றி தரம் 2E வகுப்பாசிரியை திருமதி ML றிஸ்னா ஆசிரியை இவ்வாறு குறிப்பிட்டார் :
"உற்சாகம் நிறைந்த இம் மாணவர்கள் வகுப்பறையிலும் வெளி வேலைகளிலும் விருப்புடன் ஈடுபடக்கூடியவர்கள். கல்வியிலும் சிறந்து விளங்குபவர்கள்..." என்று தமது மாணவர்களைப் பற்றி வகுப்பாசிரியை குறிப்பிட்டார்.
பெற்றோரின் பண்பான வளர்ப்பும் . . .
ஆசிரியர்களின் அன்பான வழிகாட்டலும் எமது மாணவர்களை நிச்சயம் உச்சம் தொடவைக்கும்... என்றும் ஆசிரியர் குறிப்பிட்டார் . . .
எமது மாணவர்கள் அனைவருக்குமாக . . பிராத்திப்போமாக . . .
Comments
Post a Comment