இப்படியும் ஒரு மாணவன்.

10.05.2023

புதன் கிழமை...

காலை 6.30 மணியிருக்கும் . . .

பட்சிகளும் பறவைகளும்

கூடு தாண்டி . . .

உணவு தேடச் செல்லும் போது . . .

வொலிவேரியன் பள்ளிவாசலுக்குப் பின்னால் உள்ள மைதானத்தில்.. 

அல் - ஹிலால்  வித்தியாலய மாணவர்கள் . . .

எதிர்வரும் வலய மட்ட விளையாட்டுப் போட்டிக்காக . . . 

பயிற்சியில் ஈடுபட தயாராகிக் கொண்டிருந்தனர். 

முதற் கட்டமாக . . .

மாணவர்கள் அனைவரையும் வரிசையில் நிறுத்தி அடிப்படைப் பயிற்சிகளை வழங்கினார் . . .  பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் சகோதரர் நுஸ்கி...

அடிப்படைப் பயிற்சிகள் முடிவடைந்து . . .

அடுத்த கட்ட பயிற்சிகளுக்கு முன்னர் . . . 

ஓரிரு நிமிடங்கள் ஓய்வு வழங்கப்பட்டது . . .

மாணவர்கள் . . .

தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் போது . . . 

ஒரு மாணவன் மட்டும் ஓடிச்சென்று . . .

மைதானத்தில் கிடத்த ஒரு தகரப் பேணியில் சப்பாத்துக் காலை வைத்து அழுத்த முனையும் போது . . . 

அதே கனம் . . .

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரின் "விசிலின்" ஒலியும் ஒலித்தது . . .

மீண்டும் பயிற்சிகள் ஆரம்பமாகின . . .

பின்னர் மீண்டும் ஓரிரு நிமிடங்கள் ஓய்வு . . .

மீண்டும் அதே மாணவன் . . .

அந்த தகரப் பேணியை நெருங்குவதை அவதானித்த நான் . . .

அம் மாணவனை அழைத்தேன் . . .

அந்தப் பேணியை என்ன செய்யப் போகிறீர்கள் ? . . .

என்று அம் மாணவனை வினவினேன் . . .

அப் பேணியை காலால் அமுக்கி . . .  தட்டையாக்கப் போகின்றேன்  Sir . . . என்று அம் மாணவனிடம் இருந்து பணிவாகப் பதில் வந்தது . . .

எதற்காக . . . தட்டையாக்கப் போகின்றீர்கள் . . . ?

என்று மீண்டும் வினவினேன் . . .

"Sir . . .

இந்தப் பேணி அப்படியே இருந்தால் . . .

இதற்குள் நுளம்புகள் முட்டையிட்டு . . . 

நுளம்புகள் பெருகும் . . .

இப் பகுதி மக்களுக்கு டெங்கு அபாயம் . . . "

என்று பாரிய விளக்கமொன்றையே அம் மாணவன் தந்துவிட்டான். . . .

இச் சம்பவத்தை . . .

வளர்ந்தவர்கள் . . . நாமெல்லாம் சாதாரணமாகக் கருதி கடந்து சென்றுவிடலாம் . . .

ஆனால் மாணவ பருவத்தைப் பொறுத்த வரைக்கும் எவ்வளவு பொறுப்புறுதிவாய்ந்த பதிலும் செயலும் அவை என்று எண்ணிப் பார்க்கும் போது . . .

ஏதோ ஒரு இலக்கை அடைந்த திருப்தி . . .

பச்சைப்பசேலென வளர்ந்து நிற்கும் வேளாண்மையைப் பார்த்து . . .

விவசாயி கொள்ளும் மகிழ்ச்சி இருக்கின்றதே . . . 

அதே மகிழ்ச்சி . . .

J. Sharahb Ahamed என்ற இம் மாணவனைப் பற்றி தரம் 10A வகுப்பாசிரியையான 

திருமதி SSM. Jaseel ஆசிரியையின் பதிவு இவ்வாறு இருந்தது :

" J sharahb Ahamed அமைதியான சுபாவம் கொண்ட மாணவராவார் . . . சிறு வயதிலிருந்தே வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு கொண்டவராவார் . . .  கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றும் பண்புகொண்ட இம் மாணவன் . . .  வகுப்பில்  தான் கடந்து செல்லும்போது காணப்படும் கடதாசி, குப்பைகளை தாமாகவே முன்வந்து சுத்தப்படுத்தக் கூடிய மாணவராவார் . . ." என்று பெருமைபடக் கூறினார் . . . வகுப்பாசிரியை . . .


பாடசாலையில் சிரமதானம் மற்றும் விசேட நிகழ்ச்சிகளுக்காக மாணவர்கள் அழைக்கப்படும்போது  தவறாது கலந்து கொள்பவர்களில் இம் மாணவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது . . .

பெற்றோரின் வளர்ப்பும் இம்மாணவனின் இப் பண்புகளை நிச்சயம் மெருகூட்டியிருக்கும் . . .

சமூகம் வேண்டி நிற்கும் இன்னுமொரு 

கலங்கரை விளக்காக இம் மாணவனைக் காண்கின்றோம் . . .

பிராத்தனைகளுடன் வாழ்த்துக்கள் . . .

Comments

  1. We proud of you son.. May almighty's blessings be with you always..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..