அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் | ஆக்கம் : F.M. Rusai Aksam - Grade - 7D

அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் 

பெனிசிலின் என்ற அற்புத மருந்தை உலகுக்கு தந்ததன் மூலம் மருத்துவ உலகின் தலை எழுத்தினையே மாற்றி அமைத்த அலெக்ஸாண்டர் ஃபிளெயிங் 1781 ம் ஆண்டு ஆகஸ்ட் 6 ம் திகதி ஸ்கொட்லத்தின் பொக்வில் என்ற நகரில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் அலெக்ஸாண்டர் ஃபிளமிங். அவர் விவசாயத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்தனர் . ஆனால் அவர் அதிலும் ஈடுபடாமல் படிப்பையும் மேற்கொள்ளாமல் ஒரு நிறுவனத்தில் சுமார் 4 ஆண்டுகள் எழுத்தராக பணிபுரிந்தார் . 


தமது 20 வது வயதில் அவருக்கு கொஞ்சம் பணம் சேர்த்ததால் அவர் லண்டணின் செய்த்மீறி மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். டைபொயின் CTifoin ) காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்த சேர் எம்ரோட் எட்வட்ரைட் என்பவர் தான் ஃபி குளெமிங்க்கு பேராசிரியராக இருந்தார். 1906ஆம் ஆண்டு மருத்துவத்துதில் சிறப்புத் தேற்றி பெற்ற அந்த பேராசிரியரிடமே உதவியாளராக சேர்ந்தார் ஃபிளெமிங். தனது பேராசிரியரைப் போலவே தானும் மருத்துவத்துக்கு உதவும் ஏதாவது மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கனவு அவரிடம் இருந்தது . பக்டீரியாக் கிருமிகளைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.


முதல் உலகப்போரில் இராணுவ மருத்துவ குழுவில் அவர் இராணுவ மருத்துவ குழுவில் ஒரு கெப்டனாக இருந்த போது சரியான மருந்து இல்லாது அழிந்த போர் வீரர்களின் நிலை அவரை சிந்திக்க வைத்தது. 


அந்த கால கட்டத்தில் காமோனிக் அமிலம் தான் கிருமித் தொள்ளியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த அமிலம் கிருமிகளை கொள்ளும் அதே வேளை இரத்தத்தின் வெள்ளை அணுக்களையும் சில சமயம் எழுத்து விடுகிறது . 


முதலாம் உலக போரில் சுமார் 2 மில்லியன் வீரர்கள் காயப்பட்டு இறந்தனர். அதன் பிறகுதான் காமோனிக் அமிலம் சரியான மருந்தல்ல என்பதை ஃபிளெமிங்கும் அவரது பேராசிரியரும் உலகுக்கு அறிவித்தனர். அதோடு நின்றுவிட்டால் போதுமா ? அதற்கு சரியான மருத்தைக் கண்டுபிடிக்கு வேண்டாமா ?அவ் உலகப் போர் முடிந்த கையோடு மீண்டும் தன் ஆராய்ச்சி கூடத்திற்கு திரும்பினார் ஃபிளெமிங்.கிருமிகளைக் கொள்ளும் மருந்து வேண்டும் என்றால் முதலில் கிருமிகளின் தன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா ?


எனவே தனக்கு கிருமி  தொற்றக் கூடும் என்ற அச்சமும் இல்லாமல் பல வகை கிருமிகளை வளர்த்து அவற்றின் மீது சோதனைகளை செய்தார் ஃபிளெமிங்


1928 ம் ஆண்டு லண்டனின் இவைகளின் காலத்தில் அந்தச் சம்பவம் நேர்ந்தது. 2 வாரம் விடுமுறைக் காலத்தில் இருந்தார் ஃபிளமிங். விடுமுறைக்குச் செல்லுமுன் அவர் ஒரு ஆய்வு கூடத்தில் வட்டில் ஸ்டெபிலோ கோகஸ் என்ற கருமியைச் சேமித்து வைத்துவிட்டு சென்றார். அந்த கிருமிதான் நிமோனியா முதல் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் கடுமி. 2 வாரம் விடுமுறை முடிந்து வந்து பார்த்த போது அந்த வட்டில் பூசனம் பூத்துதிருப்பதைப் பார்த்தார்.


பூதக் கண்ணாடியில் வைத்து பார்த்த போதுதான் அந்த பூசனம் படர்ந்திருந்த இடங்களில் திருமிகள் கொள்ளப்பட்டிருப்பதை அவர் கண்டார். 


உடனே ஒரு முக்கியமான பொருளை கண்டுபிடித்துவிட்ட உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அந்த பூசனம் பெனிசிலியம் என்ற ஒரு வகை காளான் என்பது அவருக்கு புரிந்தது.

அந்த காளானை கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகள் செய்தார். அதன் விளைவாக தமக்குக் கிடைத்த அரு மருந்துதான் பெனிசிலின். மனு குலத்துகருக்கு உயிர் காக்குகும் மா மருந்தை தந்த ஃபிளெமிங்கை உலகம் அப்போது பாராட் டவில்லை. 


இருப்பினும் பெனிசிலினின் அருமை உலகம் முழுவதும் பரவியது. 2 ஆம் உலக போரின் போது அதிகளவில் பெனிசிலின் உற்பத்தி செய்யப்பட்டு காயமடைந்த போர் வீரர்களுக்கு அளிக்கப்பட்டது. அதன் பயனாக மில்லியன் கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன. 


நோய் தொற்று அபாயம் ஏற்படுமே என்று அது வரை அறுவை சிகிச்சை செய்ய தயங்கிய, மருத்துவ உலகு பெனிசிலினின் வரவுக்குப் பிறகு தைரியமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டது. அது வரை தீர்க்கப்பட முடியாதவை என்று கருதப்பட்ட நோய்களுக்கு திடீர் என்று சிகிச்சை அளிக்கமுடியும் என்பதை உலகம் கண்டு கொண்டது. பென்சிலிக்குப் பிறகு எத்தனையோவித  எண்டிபயொடேக் மருந்துகள் உற்பத்தி செய்யப் பட்டன . ஆனால் அதற்கு அனைத்துக்கும் அஸ்திவாரம் போட்டுத்தந்தது பெனிசிலன் தான். மனுக்குலத்துக்கு மா மருந்தை தந்த ஃபிளெமிங் அதனால் எந்த பொருளியல் லாபமும் அடையவில்லை. அந்த மருந்துக்கு காப்பரிமை பெறச்சொல்லி எத்தனையோ நண்பர்கள் வலியுறுத்தியும் அவர் அதனை செய்யவில்லை. செய்திருந்தால் அவர் கோடீஸ்வரராகி இருப்பார்.


இருந்தாலும் அந்த உயிர்க்காப்புக் கண்டுபிடிப்புக்காக அவர் 1945 ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு சைத்தந்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டது உலகம். ஃபிளெமிங்கின் விடா முயற்சியால் ஒரு நூற்றாண்டில் மட்டும் எண்ணில் அடங்கா உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன இனியும் எத்தனையோ காப்பாற்றப்படப் போகின்றன.


உயிர் விலைமதிக்க முடியாதது என்றால் அது உயிரைக் காக்கும் எந்த கண்டுபிடிப்பும் அதைவிட விலை மதிக்க முடியாதது. அந்த விலை மதிக்க முடியாத மருந்தைத் தந்த ஃபிளெமிங் 1955 ம் ஆண்டு மார்ச் 11 ம்நிததி லண்டனில் மாரடைப்பினால் காலமானார். அவர் பொருள் சம்பாதிக்தப்பதற்தாக அந்த மருந்தை கண்டுபிடிக்கவில்லை மனுகுலத்திற்கு பயனுள்ள ஒரு பொருளைத் தர வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக வருந்தது. அவரது நோக்கம் உயரியதாக இருந்ததனால் அவருக்கு பெனிசிலினும் கிடைத்தது.


ஆக்கம் :

F.M. Rusai Aksam

Grade - 7D







Comments

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..

பிரதான தேர்தலுக்கு ஒப்பாக நடைபெற்ற சாய்ந்தமருது அல்- ஹிலால் மாணவ பாராளுமன்ற தேர்தல்.