நாளைய உலகிற்கு முகங்கொடுக்கும் நோக்கில் அல்-ஹிலால்...
நாளைய உலகிற்கு முகங்கொடுக்கும் நோக்கில் அல்-ஹிலால்...
கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய Cadet மாணவர்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வு, பாடாசாலையின் முதல்வர் ஜனாப். U.L. Nazar அதிபர் அவர்களின் தலைமையில் கடந்த வாரம் பாடசாலையில் நடைபெற்றது.
சான்றிதழ்களை பாடசாலையின் முதல்வர் ஜனாப். U.L. Nazar அதிபர் அவர்கள் மற்றும் பிரதி அதிபர் Mrs. M.C.N. Rifca அவர்கள், உதவி அதிபர் Mrs. M.H. Nusrath Begum, Mr. K.L.A. Jawfer, Cadet பொறுப்பாசிரியர் Mr. K.M. Nasar, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் Mr. M.S.M. Nuski ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
மேலும் ஒழுக்காற்றுத்துறை பொறுப்பாசிரியர் Mr. A.M. Yaazeer, பகுதித் தலைவர்களான Mr. S. Muzammil, Mrs. U.L. Jeseema, மற்றும் ஆசிரியர்களினால் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
20 பிரதேசப் பாடசாலைகள் பங்குபற்றிய தேர்வு நிகழ்வில் அல்-ஹிலால் பாடசாலை மாணவர்கள் 6ஆவது இடத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இத் தேர்வு நிகழ்வு Cap. Nibras Khan தலைமையில் 38th battalion இல் நடைபெற்றது. Cadet பொறுப்பாசிரியர் K.M. Nasar, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் M.S.M. Nuski ஆகியோர் மாணவர்களை பொறுப்புணர்வுடன் பயிற்றுவித்திருந்தனர்.
நாளைய உலகிற்கு முகங்கொடுக்கும் ஆளுமையுள்ள மாணவர்களை உருவாக்கும் நோக்கோடும் எதிர்கால நேர்முகப்பரீட்சைகளில் சமர்பிப்பதற்கு தகுதியான சான்றிதழ்களை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையிலும் பாடசாலையின் முதல்வர் ஜனாப். U.L. Nazar அதிபர் அவர்கள் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நோக்கங்களுக்காக பாடசாலை சாரணர் அணியும் பாடசாலை அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment