Posts

Showing posts from October, 2022

சித்திரம் | MHM.Akees Grade 06 D

Image
சித்திரம் | MHM.Akees Grade 06 D

2022 - சதுரங்கப் போட்டியில் அல்-ஹிலால்

Image
Knights Chess Academy இன் ஏற்பாட்டில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சதுரங்க போட்டி 24.10.2022 கமு/ மழ்ஹறுஸ் ஸம்ஸ் வித்தியாலயத்தில் நடைபெற்றது. போட்டியில் 250 க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.  Age Under 12 வயது பகுப்பில் பங்கேற்று, க/மு அல் ஹிலால் வித்தியாலயதில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவி சபீலுல் லமா மூன்றாம் இடத்தில் தெரிவு செய்யப்பட்டார்.  இப்போட்டிகள் தனித்தனியாக வயது பிரிவினருக்கு, ஐந்து சுற்றுகள் கொண்டதாக நடைபெற்றது. (Individual Game) இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பல பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுவயதில் 12 வயதினரோடு வெற்றி பெற்ற சபீலுல் லமாஹ் அவர்களுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களினால் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சித்திரம் | Art by : M.H.M. Akees - Grade 06 D

Image
சித்திரம் | Art by : M.H.M. Akees - Grade 06 D  

සතිය / සුමාන - வாரநாட்கள் | ஆக்கம் : M.A.S.M. Hathis - 8 C

Image
සතිය / සුමාන - வாரநாட்கள் | ஆக்கம் : M.A.S.M. Hathis - Grade - 8 - C  

சித்திரம் | Art by : F.M. Sahee - Grade - 6D

Image
Art by : F.M. Sahee - Grade - 6D

ஒத்தகருத்துச் சொற்கள் - S.M. Asrif - Grade - 8C

ஒத்தகருத்துச் சொற்கள் காப்பியம் - காவியம் வியப்பு - மருட்கை பறவை - பட்சி  கோலம் - அழகு குழந்தை - குழவி  நாணம் - வெட்கம் காரியம் - வேலை மரியாதை - கௌரவம் மயாணம் - சுடுகாடு கடிதம் - மடல் நண்ணீர் - நீர் பனுவல் - நூல் உள்ளம் - மனம் அச்சம் - பயம் தேர்வு - பரீட்சை ஆசை - விருப்பம் காடு - வனம் தொகுப்பு :  S.M.Asrif - Grade - 8C

Grade - 1F - சிறுவர்தின நிகழ்வுகள் - 2022

Image
தரம் - 1 - F மாணவர்களின் சிறுவர்தின நிகழ்வுகளை வகுப்பாசிரியர்   Mrs. S. Aneesa Begum  ஆ சிரியை அவர்கள் திறன்பட நெறிப்படுத்தியிருந்தார்கள். இந் நிகழ்வுகளில் உதவி அதிபர் Mrs. M.H. Nusrath Begum அவர்களும், தரம் - 1 பகுதித் தலைவர் Mrs. A.M.F. Dilshaniya ஆசிரியை அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும் பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். மேலும் புகைப்படங்களைப் பார்வையிட ( Click Here )

தரம் - 1 - மாணவர்களின் மாதிரிச் சந்தை நிகழ்வு 📷 📹

Image
தரம் - 1 - மாணவர்களின் சந்தை நிகழ்வு பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வை தரம் - 1 ஆசிரியர்கள் திறன்பட ஒழுங்கமைத்திருந்தனர். மாதிரி சந்தை ஒன்றை பாடசாலையில் நிகழ்த்திக்காட்டியதன் மூலம் சந்தை தொடர்பான அடிப்படை விடயங்களை நேரடி அனுபவங்களாக மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். பாடசாலை முதல்வர்  ஜனாப். U.L. நசார் அதிபர் அவர்கள், பிரதி அதிபர் Mrs. M.C.N. Rifca அவர்கள் மற்றும் உதவி அதிபர்கள், ஒழுக்காற்றுத்துறை பொறுப்பாசிரியர் A.M. Yaazeer, தரம் 1 பகுதித் தலைவர் மற்றும் தரம் 1 ஆசிரியர்கள், தரம் - 1 மாணவர்கள் ஆகியோர் மாதிரி சந்தைத் தொகுதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் சந்தை நிகழ்வைப் பார்வையிட்டு பொருட்களையும் கொள்வனவுசெய்தனர். மேலும் படங்களைப் பார்வையிட ( Click Here )

Grade - 1E - சிறுவர்தின நிகழ்வுகள் - 2022

Image
தரம் - 1 - E மாணவர்களின் சிறுவர்தின நிகழ்வுகளை வகுப்பாசிரியர்   Mrs. M. L. Risna ஆ சிரியை அவர்கள் திறன்பட நெறிப்படுத்தியிருந்தார்கள். மேலும் பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். மேலும் புகைப்படங்களைப் பார்வையிட (Click)

சமுதாய சிற்பிகள் - ஆசான்கள். | கவிஆக்கம் : சம்ஹி எம் கலீல் சிம்ஹா எம் கலீல் Grade - 7A

சமுதாய சிற்பிகள்! ...ஆசான்கள்..!   சிந்திக்கத் தெரிந்த தலைமுறையை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்...!.. ... கல்வியை இதயத்திலே..சுமக்கும் இனிமையாக மாற்ற வேண்டியது ஆசிரியர்களின் பொறூப்பாகும்...!...அந்த வகையில் அறிவியல் கற்றுத் தருகின்ற அன்பு மிகு ஆசிரியை சில்மியா டீச்சர்... ஆசிரியர் வாயில் இருந்து வருகின்ற வார்த்தைகள்  சத்தியத்தில் கருவாகி... நெஞ்சத்தில் உருவாகி...வெளியிலே வந்து விழுமானால்...! அதைகேட்கின்ற.மாணவர்களிடத்தில்  இதயத்தில் விதையாக விழும்..அது விருட்சமாக வளரும்..! ... எந்நேரமும் அக்கறையுடனும்.. நம்பிக்கை ஊட்டும் சொற்களுடன்... அன்பு கலந்த கண்டிப்புடனும்... ஓர் ஆசிரியர் மாணவரை அணுகினால் அந்த மாணவர்கள் ஒரு காலமும் தோற்றுப்போவதில்லை..... ... அந்த வகையில் அன்பு ஆசிரியை சில்மியா டீச்சருக்காக ...அன்புடன் பிரார்த்தனை கலந்த வரிகள்..!... ..... சம்ஹி எம் கலீல் சிம்ஹா எம் கலீல்....

பெற்றோர். | தொகுப்பு : கலீல் பாத்திமா சிம்ஹா - தரம் 07-A

உன் தந்தையைப் போல  உன்னைப் பாதுகாப்பவர்  யாருமில்லை... உன் தாயைப் போல  உன்னை நேசிப்பவரும்   யாருமில்லை. தாய் தந்தைக்கு முன்பு உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான். தாய் தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..! அதனால் உங்களுக்கு இவ்வுலகிலும். மறுவுலகிலும் நன்மையே   கிடைக்கும் தாய் தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..! அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்வார்கள்..! தாய் தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..! ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..? தாய் தந்தைக்கு முன்பு பார்வையை  தாழ்த்தி கொள்ளுங்கள்..! அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..! தாய் தந்தையர் கூறும் அறிவுரைகளை கவனமாகக் கேளுங்கள் அதன் மூலம்  பயன் அடைந்துக்கொள்ளுங்கள்.. தாய் தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்கள்... மிகவும் அழகான முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர்கள் அவர்களே...! அவர்களின்  மரணத்திற்கு முன்பே அவர்களுக்கு  மரியாதை செய்யுங...

Grade - 1D - சிறுவர்தின நிகழ்வுகள் - 2022

Image
தரம் - 1 - D மாணவர்களின் சிறுவர்தின நிகழ்வுகளை வகுப்பாசிரியர்   Mrs. M.N Faizal ஆ சிரியை அவர்கள் திறன்பட நெறிப்படுத்தியிருந்தார்கள். மேலும் புகைப்படங்களைப் பார்வையிட ( Click )

Grade - 1C - சிறுவர்தின நிகழ்வுகள் - 2022

Image
தரம் - 1 - C மாணவர்களின் சிறுவர்தின நிகழ்வுகளை வகுப்பாசிரியர்  Mrs. M.M. Mursitha  ஆசிரியை அவர்கள் திறன்பட நெறிப்படுத்தியிருந்தார்கள். நிகழ்வுகளில் பகுதித்தலைவர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் படங்களைப் பார்வையிட ( Click )

சிறுவர்தின நிகழ்வு - 2022 - தரம் - 4

தரம் - 4 மாணவிகள் பங்குபற்றிய சங்கீதக் கதிரை நிகழ்ச்சி ...  

அல்-ஹிலால் வித்தியாலய சிறுவர்தின நிகழ்வுகள்.

Image
இன்றைய தினம் கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் சிறுவர்தின நிகழ்வுகள் வித்தியாலயத்தின் முதல்வர், ஜனாப் U.L. நசார் அதிபர் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. விசேட நிகழ்வு இன்றைய சிறுவர் தின நிகழ்வுகளின் சிறப்பம்சமாக பாடசாலையின் அனைத்து  மாணவர்களுக்கும் ice-cream வழங்கிவைக்கப்பட்டது. அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 1600 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் Ice-cream வழங்க பாடசாலையின் முதல்வர் U.L. நசார் அதிபர் அவர்கள்  முயற்சித்திருந்தமை அனைவரினதும் கவனத்தைப் பெற்றிருந்தது. விளையாட்டு நிகழ்வுகள் மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்கள், மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கலந்துகொண்டனர். நிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

சித்திரம் | Art by : A.M.Hasmath Grade - 7B.

Image
சித்திரம் | Art by : A.M.Hasmath Grade - 7B.