தரம் - 1 - மாணவர்களின் மாதிரிச் சந்தை நிகழ்வு 📷 📹
தரம் - 1 - மாணவர்களின் சந்தை நிகழ்வு பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வை தரம் - 1 ஆசிரியர்கள் திறன்பட ஒழுங்கமைத்திருந்தனர்.
மாதிரி சந்தை ஒன்றை பாடசாலையில் நிகழ்த்திக்காட்டியதன் மூலம் சந்தை தொடர்பான அடிப்படை விடயங்களை நேரடி அனுபவங்களாக மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
பாடசாலை முதல்வர் ஜனாப். U.L. நசார் அதிபர் அவர்கள், பிரதி அதிபர் Mrs. M.C.N. Rifca அவர்கள் மற்றும் உதவி அதிபர்கள், ஒழுக்காற்றுத்துறை பொறுப்பாசிரியர் A.M. Yaazeer, தரம் 1 பகுதித் தலைவர் மற்றும் தரம் 1 ஆசிரியர்கள், தரம் - 1 மாணவர்கள் ஆகியோர் மாதிரி சந்தைத் தொகுதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் சந்தை நிகழ்வைப் பார்வையிட்டு பொருட்களையும் கொள்வனவுசெய்தனர்.
மேலும் படங்களைப் பார்வையிட (Click Here)
Comments
Post a Comment