பெற்றோர். | தொகுப்பு : கலீல் பாத்திமா சிம்ஹா - தரம் 07-A
உன் தந்தையைப் போல
உன்னைப் பாதுகாப்பவர் யாருமில்லை...
உன் தாயைப் போல
உன்னை நேசிப்பவரும்
யாருமில்லை.
தாய் தந்தைக்கு முன்பு உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்.
தாய் தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு இவ்வுலகிலும். மறுவுலகிலும் நன்மையே கிடைக்கும்
தாய் தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்வார்கள்..!
தாய் தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?
தாய் தந்தைக்கு முன்பு பார்வையை
தாழ்த்தி கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!
தாய் தந்தையர் கூறும் அறிவுரைகளை கவனமாகக் கேளுங்கள் அதன் மூலம் பயன் அடைந்துக்கொள்ளுங்கள்..
தாய் தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்கள்...
மிகவும் அழகான முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர்கள் அவர்களே...!
அவர்களின் மரணத்திற்கு முன்பே அவர்களுக்கு மரியாதை செய்யுங்கள்
அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விடாதீர்கள்
அவர்கள் உங்களுடைய அருகில்
இருக்கும்போது அவர்களின்
அருமை உங்களுக்கு தெறியபோவதுமில்லை
இறைவன் அல்குர்ஆனில்
கூறுகிறான்
❤பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்!
(அல்குர்ஆன் 4:36)
பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்!
அவ்விருவரையும் விரட்டாதீர் ❤மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!
(அல்குர்ஆன் 17:23)
அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று பிராத்தியுங்கள் !
(அல்குர்ஆன் 17:24)
உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக!
(அல்குர்ஆன் 31:14)
இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! (அல்குர்ஆன் 31:15)
-தொகுப்பு-
கலீல் பாத்திமா சிம்ஹா..
தரம் 07A
கமு /அல்-ஹிலால் வித்தியாலயம்.
சாய்ந்தமருது.
Comments
Post a Comment