போதை, புகைத்தல் ஒழிப்புப் பேரணி...
மேலும் புகைப்படங்களைப் பார்வையிட Click...
(02/08/2023) இன்று சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலயத்தினால் போதை மற்றும் புகைத்தலுக்கு எதிரான பேரணி சாய்ந்தமருது சந்தை தொடக்கம் மாளிவிகா சந்தி வரை நடைபெற்றது.
கல்முனை கல்வி வலய, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை என்பவற்றின் வழிகாட்டலில் நடைபெற்ற இவ் ஊர்வலத்தில், போதைப்பொருளினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்களை கலந்துகொண்ட அதிதிகள் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கி வைத்தனர்.
இந்த பேரணியில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியும், உதவிக்கல்வி பணிப்பாளருமான எம்.என்.ஏ.மலீக், உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா மலிக், காரைதீவு தேவாலயத்தின் அருட் தந்தை ஜெயராஜ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹீர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றக் குழு அங்கத்தவர் பொறியலாளர் எம்.சி.கமால் நிசாத், கல்முனை வலய முறைசாரா கல்வி பொறுப்பு உத்தியோகத்தர் எம்.எஸ். நபார் , சுகாதார அதிகாரி எம்.பைலான் பிரதி, உதவி அதிபர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை சுகாதார உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகள், சிவில் அமைப்புக்களின் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், பாடசாலை முகாமைத்துவ குழுவினர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன்.
மாணவர்கள் சுலோகங்களை ஏந்தியவாரும், அதற்கெதிராக குரலெழுப்பியும் பேரணியில் கலந்து கொண்டனர்.
இவ் ஏற்பாடுகள் பாடசாலை ஒழுக்காற்று குழுவாலும், அதற்கு பொறுப்பான ஆசிரியர் ஏ.எம்.ஜாஸிர் அவர்களினாலும் ஏற்பாடு செய்யப்பட்டது.
Comments
Post a Comment