10.05.2023 புதன் கிழமை... காலை 6.30 மணியிருக்கும் . . . பட்சிகளும் பறவைகளும் கூடு தாண்டி . . . உணவு தேடச் செல்லும் போது . . . வொலிவேரியன் பள்ளிவாசலுக்குப் பின்னால் உள்ள மைதானத்தில்.. அல் - ஹிலால் வித்தியாலய மாணவர்கள் . . . எதிர்வரும் வலய மட்ட விளையாட்டுப் போட்டிக்காக . . . பயிற்சியில் ஈடுபட தயாராகிக் கொண்டிருந்தனர். முதற் கட்டமாக . . . மாணவர்கள் அனைவரையும் வரிசையில் நிறுத்தி அடிப்படைப் பயிற்சிகளை வழங்கினார் . . . பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் சகோதரர் நுஸ்கி... அடிப்படைப் பயிற்சிகள் முடிவடைந்து . . . அடுத்த கட்ட பயிற்சிகளுக்கு முன்னர் . . . ஓரிரு நிமிடங்கள் ஓய்வு வழங்கப்பட்டது . . . மாணவர்கள் . . . தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் போது . . . ஒரு மாணவன் மட்டும் ஓடிச்சென்று . . . மைதானத்தில் கிடத்த ஒரு தகரப் பேணியில் சப்பாத்துக் காலை வைத்து அழுத்த முனையும் போது . . . அதே கனம் . . . விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரின் "விசிலின்" ஒலியும் ஒலித்தது . . . மீண்டும் பயிற்சிகள் ஆரம்பமாகின . . . பின்னர் மீண்டும் ஓரிரு நிமிடங்கள் ஓய்வு . . . ம...
இன்றைய இப்படியும் ஒரு மாணவன் பகுதியில் மாணவர் குழுவொன்று இடம்பெறுகின்றது. [மாணவர்களின் பெயர் விபரங்கள், புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.] 16.06.2023 - வெள்ளிக்கிழமை. ஆரம்பப் பிரிவு மாணவர்களின் இடைவேளை நேரம்.. ஆரம்பப் பிரிவு மாணவர்கள் சுறுசுறுப்பாக இடைவேளை நேரத்தை கழித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களது சுறுசுறுப்பில், எறும்புகளுக்கு வேர்த்துவிடும் . . . பட்சிகள் தோற்றுவிடும் . . . அம் மாணவர்கள் உணவைப் பகிர்ந்து உண்ணும் விதமோ . . . தனியழகு . . . சிந்தாமல் சிதறாமல் உணவை உண்ணும் சிறுவர்கள் . . . பாடசாலை இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது... இப்படி இருக்கையில்... "வேர்த்து விறுவிறுத்து.." சுமார் 5 மாணவர்கள் ...அரக்கப் பறக்க Sir... Sir என்று கத்தியவாறு ஓடி வந்தார்கள்... ஏதோ . . . பாரிய அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும் என்று . . . உள்ளுணர்வு உணர்த்தியது . . . " Sir . . . Sir . . . அங்கே இருக்கின்ற பூ மரத்தை யாரோ பிடுங்கிப் போட்டிருக்கிறார்கள். அத . . . அதை . . . நாட்டாவிட்டால் செத்துவிடும் . . . " என்று 5 மாணவர்களும் ஆளுக்கொரு செய்தியாக குறிப்பிட்டார்கள். ...
24/02/2023 - வெள்ளிக்கிழமை. காலைப்பொழுது ... இறைவனின் அத்தாட்சிகளை சுவைக்கும் நேரமது ... இருள்படிந்த உலகம்.. வெளிச்சத்தால் தீந்தையடிக்கப்பட்டுக்கொண்டிருந்தது . . . கூடுகளுக்குள் உறைந்திருந்த பறவைகள் தேடலுக்காக சுறுசுறுப்பாகப் பயணமாகிக்கொண்டிருந்தன . . . அவ்வாறுதான் அல்ஹிலால் வித்தியாலயமும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தது... நேரம் காலை 07.30 .... பாடசாலை ஒலிபெருக்கியில் கிறாஅத் ஆரம்பமாகியது ... இன்று வெள்ளிக்கிழமை என்பதால், சூரதுல் ஜும்ஆ வசனங்கள் ஓதப்பட்டன... கிறாஅத் ஓதல் ஆரம்பித்தவுடன் அனைவரும் அசையாமல் நின்றுகொண்டிருந்தனர்.. பாடசாலை வளாகம் கிறாஅத் ஓதலுக்காக பக்தி நிறைந்த பிரதிபலிப்பை வெளிக்காட்டிக்கொண்டிருந்தது. பாடசாலை வளாகத்தில் அசையாமல் நின்ற மாணவர்களிடையே... தரம் 5 அல்லது தரம் 4 ஐச் சேர்த்த ஒரு மாணவனின் உதடுகள் மட்டும் இலேசாக அசைந்துகொண்டிருந்தது . . உற்றுப் பார்த்தபோது ஆச்சரியம் ஆட்கொண்டது... ஒலிபெருக்கியினால் ஓதப்படும் கிறாஅத்தை அம்மாணவனின் உதடுகளும் மெதுவாக அசைபோட்டுக்கொண்டிருந்தது... உரத்துப் பெய்யும் கன மழை . . . தடாரென தூவானம் தூவி மெதுவாக நிற்பதைப்போல . . ....
Comments
Post a Comment