பிரதான தேர்தலுக்கு ஒப்பாக நடைபெற்ற சாய்ந்தமருது அல்- ஹிலால் மாணவ பாராளுமன்ற தேர்தல்.
பிரதான தேர்தலுக்கு ஒப்பாக நடைபெற்ற சாய்ந்தமருது அல்- ஹிலால் மாணவ பாராளுமன்ற தேர்தல். நூருல் ஹுதா உமர் கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் தேர்தல்கள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து பாடசாலைகள் தோறும் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலயத்தில் 2023ம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டு தெரிவுக்கான தேர்தல் இன்று பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. தேர்தல் ஆணையாளர் பாடசாலை அதிபர், தேர்தல் நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்களாக பிரதி அதிபர், உதவி அதிபர், உதவி தேர்தல் அலுவலகர், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர் பகுதிக்கு பொறுப்பான ஆசிரியர்கள், கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர், மேற்பார்வை அலுவலகர், கண்காணிப்பு அலுவலகர் ஆகியோர் தேர்தல் கடமைகளுக்கான உத்தியோக...