Posts

Showing posts from September, 2023

பிரதான தேர்தலுக்கு ஒப்பாக நடைபெற்ற சாய்ந்தமருது அல்- ஹிலால் மாணவ பாராளுமன்ற தேர்தல்.

Image
பிரதான தேர்தலுக்கு ஒப்பாக நடைபெற்ற சாய்ந்தமருது அல்- ஹிலால் மாணவ பாராளுமன்ற தேர்தல்.  நூருல் ஹுதா உமர்  கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் தேர்தல்கள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து பாடசாலைகள் தோறும் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலயத்தில் 2023ம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டு தெரிவுக்கான தேர்தல் இன்று பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. தேர்தல் ஆணையாளர் பாடசாலை அதிபர், தேர்தல் நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்களாக பிரதி அதிபர், உதவி அதிபர், உதவி தேர்தல் அலுவலகர், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர் பகுதிக்கு பொறுப்பான ஆசிரியர்கள், கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர், மேற்பார்வை அலுவலகர், கண்காணிப்பு அலுவலகர் ஆகியோர் தேர்தல் கடமைகளுக்கான உத்தியோக...

பண்டிகைக்கால உணவுக் கண்காட்சி - தரம் - 03 - 2023

Image
எமது பாடசாலையில் நடைபெற்ற தரம் 3 மாணவர்கள் நடத்தும் பண்டிகை கால உணவு கண்காட்சி. வியூகம் தொலைக்காட்சி நேரலையைப் பார்வையிட ==Click==>  https://fb.watch/nqEchNjHxD/?mibextid=Nif5oz Video <<< Click

சித்திரம் - கைப்பணிக் கண்காட்சி - 2023

Image
இன்று சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலயத்தில் சித்திரம் - கைப்பணிக் கண்காட்சியும், நான்கு இனத்தைச் சேர்ந்த மக்களின் பெருநாள் உணவுக் கண்காட்சியும் என இருபெரும் நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் UL நசார் Sir அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. சித்திரைக் கண்காட்சி நிகழ்வினை பிரதிக் கல்விப் பணிப்பாளர்  B.JIHANA AALIF அவர்கள் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் NM.MALEEK, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றக் குழு அங்கத்தவர் பொறியலாளர்  MC. KAMAL NISHANTH ,, முன்னாள் அதிபர் ILA.MAJEED, முன்னாள் அதிபர் IL.HAMZA, பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் MI.SARJOON பிரதி அதிபர் NUSRATH BEGUM, AB. SHERON DILRADS மற்றும் பகுதித் தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Al-Hilal - மாணவர் பாராளுமன்றம் வேட்புமனுத்தாக்கள் - 2023.

Image
மாணவர் பாராளுமன்றத்திக்கான வேட்புமனுத்தாக்கல் நிகழ்வுகள் இன்றைய தினம் பாடசாலையில் இடம்பெற்றன. பாடசாலையின் அதிபர் ஜனாப் UL நசார் Sir அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதி அதிபர் Mrs. MH Nusrath Begum, உதவி அதிபர் Mrs. MF Inul Marsuna ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வுகளை உதவி அதிபர் Mr. AB Sheron Dilras (Election Commissioner) அவர்கள் நெறிப்படுத்தி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாணவர் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமான ஜனாப் UL நசார் அதிபர் அவர்களிடம் மாணவர்கள் வேட்புமனுக்களைத் தாக்கள் செய்தனர். இதன்போது வேட்பாளர்களுக்கு சின்னங்களும் இலக்கங்களும் வழங்கப்பட்டன. பாட ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள், பகுதித் தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் என பலரும் வேட்புமனுத்தாக்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2023 - Kids Athletic - Al Hilal - Championship

Image
நேற்று (09.09.2023) கோட்ட மட்ட  Kids Athletic போட்டியில் சாய்ந்தமருது  கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் தரம் 3,4,5 ஆகிய சகல தரங்களிலும் தனிப்பிரிவில் போட்டியிட்டு முதல் இடத்தினைப் பெற்று 𝚌𝚑𝚊𝚖𝚙𝚒𝚘𝚗🏆 ஆகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.💪  இதனை பயிற்றுவித்த ஆசிரியர்களான எஸ்.ஐ.நஸீஹா பேகம், ஏ.ஜீ.அஸ்ஹர், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.நுஸ்கி போட்டியில் இவர்களுடன் பங்கு கொண்ட தரம் மூன்று ஆசிரியர்கள், பெற்றோர்கள், விசேடமாக வெற்றியை பெற்றுத் தந்த மாணவர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.

Image
தரம் 9, 10 மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் கருந்தரங்கு பாடசாலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஜனாப் UL நசார் Sir அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் VTA அதிகாரிகளினால் மாணவர்களுக்கு விரிவுரைகள் நடாத்தப்பட்டன. "எதிர்கால தொழில் உலகிற்கு முகம்கொடுக்கும் வகையில் மாணவ சமூகம் தயார்படுத்தப்படல் வேண்டும்." என்ற வகையில் பாடசாலையின் அதிபர் ஜனாப் UL நசார் Sir அவர்களினால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது. இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையைச் (VTA) சேர்ந்த ஜனாப் உதுமாலெப்பை மற்றும் Mr. MM. Mahzoon ஆகியோரினால் மாணவர்களுக்கு விரிவுரைகள் நடாத்தப்பட்டன. இந்நிகழ்வில், பிரதி அதிபர் Mrs. MH Nusrath Begum,  உதவி அதிபர் Mrs. MF Inul Marsuna,  ஒழுக்காற்றுத்துறை பொறுப்பாசிரியர் Mr. AM Yaazeer,  உளவள, ஆலோசனைப் பொறுப்பாசிரியர் Mr. AL Mohammed Rimzath மற்றும் ஆசிரியர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு தொடர்பில் மாணவர்களினால் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.