Posts

Showing posts from August, 2023

அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்கிய வாழ்த்துச் செய்தி

பாடசாலைகளுக்கிடையே 28.08.2023 கிழக்கு மாகாண கல்விப் பணிமனையில் நடைபெற்ற ஆக்க ரீதியான சிறந்த செயற்பாட்டு நடைமுறைகள்  Best practices போட்டி செயற்பாட்டு நிகழ்வில் மூன்று பாடசாலைகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு மத்திய கல்வியமைச்சில் நடைபெறும் போட்டி நிகழ்ச்சிக்கு செல்ல இருக்கிறது.  எமது சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலயம் கிழக்கு மாகாண போட்டியில்  முதன்மை நிலையில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளை உருவாக்கிய ஆசிரியர் ALM.ERZHAD அவர்களுக்கும், துணை நின்ற உதவி அதிபர் ABS.Dilras, பகுதித் தலைவர் KLA.Jaufar, மற்றும் பிரதி அதிபர் எம்.எச்.நுஸ்ரத், உதவி அதிபர் ஐனூல் மர்சுனா, ஆசிரியர்களுக்கும் நன்றிகள். பாடசாலையின் அதிபர் UL நசார் Sir அவர்கள் அனைத்து நிகழ்வுகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கி, கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தை முதன்மை நிலைக்கு நகர்த்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.  அத்துடன் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்கிய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் சேர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸா Ma'am...

இப்படியும் ஒரு மாணவன்.

Image
இன்றைய இப்படியும் ஒரு மாணவன் பகுதியில் மாணவர் குழுவொன்று இடம்பெறுகின்றது. [மாணவர்களின் பெயர் விபரங்கள், புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.] 16.06.2023 - வெள்ளிக்கிழமை. ஆரம்பப் பிரிவு மாணவர்களின் இடைவேளை நேரம்.. ஆரம்பப் பிரிவு மாணவர்கள் சுறுசுறுப்பாக இடைவேளை நேரத்தை கழித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களது சுறுசுறுப்பில், எறும்புகளுக்கு வேர்த்துவிடும் . . . பட்சிகள் தோற்றுவிடும் . . . அம் மாணவர்கள் உணவைப் பகிர்ந்து உண்ணும் விதமோ . . . தனியழகு . . . சிந்தாமல் சிதறாமல் உணவை உண்ணும் சிறுவர்கள் . . .  பாடசாலை இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது... இப்படி இருக்கையில்... "வேர்த்து விறுவிறுத்து.." சுமார் 5 மாணவர்கள்  ...அரக்கப் பறக்க Sir... Sir என்று கத்தியவாறு ஓடி வந்தார்கள்... ஏதோ . . . பாரிய அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும் என்று . . . உள்ளுணர்வு உணர்த்தியது . . . " Sir . . .  Sir . . . அங்கே இருக்கின்ற பூ மரத்தை யாரோ பிடுங்கிப் போட்டிருக்கிறார்கள்.  அத . . . அதை . . . நாட்டாவிட்டால் செத்துவிடும் . . . " என்று 5 மாணவர்களும் ஆளுக்கொரு செய்தியாக குறிப்பிட்டார்கள். ...

போதை, புகைத்தல் ஒழிப்புப் பேரணி...

Image
மேலும் புகைப்படங்களைப் பார்வையிட Click... (02/08/2023) இன்று சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால்  வித்தியாலயத்தினால் போதை மற்றும் புகைத்தலுக்கு எதிரான பேரணி சாய்ந்தமருது சந்தை தொடக்கம் மாளிவிகா சந்தி வரை நடைபெற்றது. கல்முனை கல்வி வலய, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை என்பவற்றின் வழிகாட்டலில் நடைபெற்ற இவ் ஊர்வலத்தில்,  போதைப்பொருளினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்களை கலந்துகொண்ட அதிதிகள் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கி வைத்தனர்.  இந்த பேரணியில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியும், உதவிக்கல்வி பணிப்பாளருமான எம்.என்.ஏ.மலீக், உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா மலிக், காரைதீவு தேவாலயத்தின் அருட் தந்தை ஜெயராஜ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்...