Posts

Showing posts from May, 2023

வீதி ஒழுங்கு, சட்டத்திற்கு பணிதல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான அறிவுறுத்தல்.

Image
கடந்த வெள்ளிக்கிழமை (19.05.2023) அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நடந்த காலைக்கூட்ட நிகழ்வில், வீதி ஒழுங்கு, சட்டத்திற்கு பணிதல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான அறிவுறுத்தல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இதுதொடர்பான அறிமுக உரையினை பாடசாலையின் அதிபர் UL நசார் Sir அவர்கள் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் திரு. R.K. Rumendranath, P.C அவர்களினால் மேற்குறிப்பிட்ட தலைப்புக்கு அமைய உரைநிகழ்த்தப்பட்டது.   மாணவர்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒழுங்குவிதிகள், சட்டத்திற்கு மதிப்பளித்தல், போதைப்பொருள் போன்ற விடயங்களை, சரளமான மொழிப்பிரயோகத்தில் மாணவர்களைக் ஈர்க்கும் விதத்தில் திரு. R.K. Rumendranath, P.C அவர்கள் நிகழ்தியிருந்தார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள்.  

2023 வலய மட்ட விளையாட்டுப் போட்டிக்கு அல்-ஹிலால் மாணவர்கள் தெரிவு . . .

Image
2023 வலய மட்ட விளையாட்டுப் போட்டிக்கு அல்-ஹிலால் மாணவர்கள் தெரிவு . . . Video 👇🏻 நடைபெற்று முடிந்த கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் அல்-ஹிலால் வித்தியாலய மாணவர்கள் 1ஆம், 2ஆம், மற்றும் 3ஆம் இடங்களைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். பாடசாலையின் அதிபர் UL Nazar Sir அவர்களின் வழிகாட்டலில், உடற்கல்வி ஆசிரியை Mrs. SI Nazeeha Begum, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் MSM Nuski ஆகியோரின் பயிற்றுவிப்பில், மாணவர்களின் முழுமையான ஈடுபாட்டில் இச் சாதனைப் பெருமைகள் அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இன்று நடைபெற்ற காலைக் கூட்ட நிகழ்வில், கோட்ட மட்ட போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களை அதிபர், ஆசிரியர்கள் பாராட்டி மகிழ்ந்தனர். போட்டி நிகழ்ச்சிகளில் கிடைக்கப்பெற்ற இடங்களும் மாணவர்களின் பெயர்களும் வருமாறு : Under 12 Boys 4x100m Relay -  1st place Relay squad 1.Sukry 2.Saajith 3.Muheeth 4.Sinas 5.Ammar Under 14 Boys 800m - 1st place  JM.Hasni 4x100m Relay - 2nd place Relay squad 1.Ilahi 2.Fikry 3.Amzar 4.Saarik 5.Sudais ahamed 6....

இப்படியும் ஒரு மாணவன்.

Image
10.05.2023 புதன் கிழமை... காலை 6.30 மணியிருக்கும் . . . பட்சிகளும் பறவைகளும் கூடு தாண்டி . . . உணவு தேடச் செல்லும் போது . . . வொலிவேரியன் பள்ளிவாசலுக்குப் பின்னால் உள்ள மைதானத்தில்..  அல் - ஹிலால்  வித்தியாலய மாணவர்கள் . . . எதிர்வரும் வலய மட்ட விளையாட்டுப் போட்டிக்காக . . .  பயிற்சியில் ஈடுபட தயாராகிக் கொண்டிருந்தனர்.  முதற் கட்டமாக . . . மாணவர்கள் அனைவரையும் வரிசையில் நிறுத்தி அடிப்படைப் பயிற்சிகளை வழங்கினார் . . .  பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் சகோதரர் நுஸ்கி... அடிப்படைப் பயிற்சிகள் முடிவடைந்து . . . அடுத்த கட்ட பயிற்சிகளுக்கு முன்னர் . . .  ஓரிரு நிமிடங்கள் ஓய்வு வழங்கப்பட்டது . . . மாணவர்கள் . . . தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் போது . . .  ஒரு மாணவன் மட்டும் ஓடிச்சென்று . . . மைதானத்தில் கிடத்த ஒரு தகரப் பேணியில் சப்பாத்துக் காலை வைத்து அழுத்த முனையும் போது . . .  அதே கனம் . . . விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரின் "விசிலின்" ஒலியும் ஒலித்தது . . . மீண்டும் பயிற்சிகள் ஆரம்பமாகின . . . பின்னர் மீண்டும் ஓரிரு நிமிடங்கள் ஓய்வு . . . ம...