இப்படியும் ஒரு மாணவன் ...
பாடசாலை இரண்டாம் தவணைப் பரீட்சையில் மூழ்கிக்கொண்டிருந்தது. மாணவர்கள் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தனர். மாணவனொருவன்.. நேரான பார்வையுடன் . . திடமான நடையுடன் . . பாடசாலை முற்றத்திலுள்ள கொடிக்கம்பம் உள்ள பகுதியை கடந்து சென்றுகொண்டிருந்தான் . . விரைவாகச் செல்லும் கடுகதி பஸ்ஸொன்று சடுதியாக brake அடிப்பதைப்போன்று... வெறுமையாகக் கிடந்த bench ஐக் கடக்காமல் அப்படியே திடீரென நின்றான் . . . நின்ற கணத்திலே . . . அம் மாணவனின் கைகள் ஓரிரு பிடிகளாக மண்ணை அள்ளின . . . வெறுமையாகக் கிடந்த bench இல் ஏதோ கிறுக்கிச் சென்றான் . . . அவ் விடத்துக்குச் சென்று பார்த்தேன் . . . ஒரு முகத்தை புன்முறுவலாக . . . நொடிப்பொழுதில் . . . ஆக்கமாக . . . மண்ணினால் . . அம் மாணவன் . . . வரைந்திருந்தான் . . . அம் மாணவனை தொடர்ந்து சென்று . . . அம் மாணவனின் வகுப்புக்குச் சென்று . . . மாணவனைப் பாராட்டினேன் . . . அம் மாணவனின் பின்னணி . . . பற்றி வகுப்பாசிரியர் இவ்வாறு குறிப்பிட்டார் : "வகுப்பில் இயங்குநிலையிலுள்ள மாணவன், கற்றலிலும் சிறந்து விளங்கும் மாணவன்... இம் மாணவனின் பெற்றோரும் . . . பாடசாலைக்காக அர்ப்பணிப்புடன் உதவுப...