இப்படியும் ஒரு மாணவன்..
24/02/2023 - வெள்ளிக்கிழமை. காலைப்பொழுது ... இறைவனின் அத்தாட்சிகளை சுவைக்கும் நேரமது ... இருள்படிந்த உலகம்.. வெளிச்சத்தால் தீந்தையடிக்கப்பட்டுக்கொண்டிருந்தது . . . கூடுகளுக்குள் உறைந்திருந்த பறவைகள் தேடலுக்காக சுறுசுறுப்பாகப் பயணமாகிக்கொண்டிருந்தன . . . அவ்வாறுதான் அல்ஹிலால் வித்தியாலயமும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தது... நேரம் காலை 07.30 .... பாடசாலை ஒலிபெருக்கியில் கிறாஅத் ஆரம்பமாகியது ... இன்று வெள்ளிக்கிழமை என்பதால், சூரதுல் ஜும்ஆ வசனங்கள் ஓதப்பட்டன... கிறாஅத் ஓதல் ஆரம்பித்தவுடன் அனைவரும் அசையாமல் நின்றுகொண்டிருந்தனர்.. பாடசாலை வளாகம் கிறாஅத் ஓதலுக்காக பக்தி நிறைந்த பிரதிபலிப்பை வெளிக்காட்டிக்கொண்டிருந்தது. பாடசாலை வளாகத்தில் அசையாமல் நின்ற மாணவர்களிடையே... தரம் 5 அல்லது தரம் 4 ஐச் சேர்த்த ஒரு மாணவனின் உதடுகள் மட்டும் இலேசாக அசைந்துகொண்டிருந்தது . . உற்றுப் பார்த்தபோது ஆச்சரியம் ஆட்கொண்டது... ஒலிபெருக்கியினால் ஓதப்படும் கிறாஅத்தை அம்மாணவனின் உதடுகளும் மெதுவாக அசைபோட்டுக்கொண்டிருந்தது... உரத்துப் பெய்யும் கன மழை . . . தடாரென தூவானம் தூவி மெதுவாக நிற்பதைப்போல . . ....